Centre For Cultural Affairs (CCA) Activities

Centre For Cultural Affairs Activities (செயல்பாடுகள்)

2021
  • 75 ஆம் சுதந்திர தின ஆண்டினைச் சிறப்பிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு இணைய வழியில் கவிதை, ஓவியம், பேச்சு கலை, பாட்டு, தனிநபர் சைகை நாடகம் ஆகிய கலைப் போட்டிகள் 28.09.22-ல் தொடங்கப்பட்டு 11.02.22- ல் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

2022
  • 26.01.22-ல் குடியரசு தின விழாவுக்காக இசை, பரதம், பாட்டு ஆகிய கலை நிகழ்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • கதை, கவிதை, நாடகம், சினிமா ஆகிய படைப்பு உருவாக்கம் குறித்த சிம்போசியம் பல்கலைக்கழக மாணாக்கர்களைக் கொண்டு 24.02.22-ல் நிகழ்த்தப்பட்டது.
  • கல்வி கற்றலில் யோகாவும் அரங்கக் கலையும் எனும் தலைப்பில் 20.04.22 மற்றும் 22.04.22 –ல் சைதாப்பேட்டை அரசு கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி ) உடன் இணைந்து பயிலரங்கம் நடத்தப்பெற்றது.
  • 08.08.22 –ல் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு, சுதந்திர இந்தியாவின் வளர்ர்சி எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
  • 13.08.22–ல் பல்கலைக்கழகப் பணியாளர்களின் சிறார்களுக்காக, தேசத்தலைவர் மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டு 26.08.22 குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கப்பட்டது.
  • 26.08.22-ல் நடத்தப்பெற்ற குடியரசு தினவிழாவில் இசை, பாட்டு, கூத்து, நாடகம், நடனம் ஆகிய நிகழ்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • 13.12.22-ல் திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் (Sri Padmavati Mahila Visvavidyalayam. (Women's University). Tirupati,) 2023, ஜனவரி, 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் தென்னகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நிகழும் AIU South Zone UNIFEST கலைப் போட்டிகளில் பங்கு கொள்ளும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டது.
    • 2023
      1. 03.01.23 முதல் 07.01.22 ஆம் தேதி வரை திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் தென்னகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே (AIU South Zone UNIFEST) நடைபெற்ற கலைப் போட்டிகளில் மாணாக்கர்கள் பங்கு கொண்டு குறுநாடகம், சைகை நாடகம், தனி நபர் நடனம் (பரதநாட்டியம்), இசை, அறிவுப்போட்டி ஆகிய போட்டிகளில் முதன்முறையாகப் பங்கு கொண்டனர்.
      2. தனிநபர் நடனப்(பரதம்) போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு இடையான தேசியப் போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளர்.