• Screen Reader Access
  • Font Size
  • Contrast Scheme

FAQ

திறந்தநிலைக் கற்றல் என்றால் என்ன?

திறந்தநிலைக் கற்றல் என்பது கல்வியில் ‘எல்லைகளற்ற தன்மையைக்’ குறிக்கிறது. நீங்கள் விரும்பும் கல்வியை, உங்கள் தேவைகளுக்கேற்ப எங்கிருந்தபடியும் பெறலாம். செய்முறை பாடப்பிரிவுகள் தவிர, இதரப் பாடப்பிரிவுகளில் சேர்ந்திருப்பின், நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வகுப்புகளில் மட்டும் கலந்துகொண்டால் போதும். கற்போருக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. இவ்வாறு பாடப்பிரிவுகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை

திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கற்றல் (ODL) வழக்கமான கல்வியைப் போன்றதா?

ஆம். திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கற்றல் (ODL) என்பது உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி முறையாகும். இத்தகைய பல்கலைக்கழகங்கள், வழக்கமான முறையிலும் கல்வி வழங்கிவருகின்றன

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமா?

ஆம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (TNOU) 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ( சட்டம் எண். 27) நிறுவப்பட்டது. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாராம் பெற்றது. மேலும் நிதிநல்கைக் குழுவின் 1956 ஆம் ஆண்டு சட்ட விதியின் படி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு 12 – பி தகுதி வழங்கியுள்ளது. மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளும் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு- தொலைநிலைக் கல்வி மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற படிப்புகளாகும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் (முறைசார்) குடிமைப் பணி (UPSC) தேர்வுகளுக்குத் தகுதியானவர்களா?

ஆம், தகுதியானவர்களே. ஏனெனில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் நிறுவப்பட்டு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் பல்கலைக்கழகம் ஆகும்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்கள் அரசுப் பணிகளுக்கும் பதவி உயர்விற்கும் ஏற்புடையதா?

ஆம். 10+2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பட்டங்கள் அனைத்தும் மாநில, மத்திய அரசுப் பணிகள் மற்றும் பதவி உயர்வுக்குத் தகுதியுடையவை.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் எங்கே அமைந்துள்ளது?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தலைமையகம் எண். 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

படிப்புகளில் சேர்வதற்காக கற்போர்கள் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தலைமையகத்திற்குத்தான் வரவேண்டுமா? வகுப்புகள் எங்கு நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் வரத் தேவையில்லை. இணைய வழியாகவே சேர்க்கைப் படிவத்தை வழங்கலாம். பல்கலைக்கழகதிற்கோ, மண்டல மைங்களுக்கோ வந்தும் சேர்க்கையை இணைய வழியில் நடத்தலாம். கற்போர்கள் வீட்டிலிருந்தபடியோ, வசதிக்கேற்ற இடங்களில் இருந்தபடியோ படிக்கலாம். இருப்பினும், சில பாடத் திட்டங்களுக்கு செய்முறை வகுப்புகள் அதற்குரிய செயல்பாடுகள் கட்டாயமாகும், இதற்காக நீங்கள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கற்றல் உதவி மையங்களுக்குச் சென்று பயிலவேண்டியிருக்கும். கற்றல் உதவி மையத்தினைத் தங்கள் வசதிக்கேற்ப கற்போர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்

பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் பின்வரும் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

(1) சென்னை, (2) தர்மபுரி, (3) மதுரை, (4) திருச்சிராப்பள்ளி, (5) கோவயமுத்தூர், (6) விழுப்புரம், (7) நீலகிரி, (8) திருநெல்வேலி, (9) சேலம், (10) மயிலாடுதுறை, (11) சிவகங்கை (12) திருவண்ணாமலை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பாட நூல்களை வழங்குகிறதா?

ஆம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அனைத்து கற்போர்களுக்கும்’ தானே கற்றல் வடிவில்’ (SIM) பாட நூல்களை வழங்குகிறது. இதற்கான கட்டணம் கல்விக் கட்டணத்தில் அடங்கும்

பாட நூல்களை நான் எப்படிப் பெற முடியும்?

மாணவர் சேர்க்கை உறுதியான பிறகு பாடப்புத்தகங்களை நேரடியாக மாணவர்களின் முகவரிக்கே அஞ்சல் வழியாக பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கிறது. பாடநூல் பிரிவிற்கு நேரடியாக வந்தும் பெற்றுக் கொள்ளலாம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் கல்வித் திட்டங்கள் மற்றும் படிப்புகள் என்னென்ன?

குறுகிய கால, சான்றிதழ், பட்டயம், தொழிற்கல்வி பட்டயம், இளநிலை, முதுநிலைப் பட்டங்கள், முதுநிலைப் பட்டயம், மேனிலைப் பட்டயம், ஆகிய படிப்புகளும் நேரடி முறையில் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மற்றும் முதுமுனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு பாடத் திட்டங்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களால் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளின் பட்டியலை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக www.tnou.ac.in. என்ற இணையதளத்தில் காணலாம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு ஏதும் உள்ளதா

இல்லை, சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை, ஆனாலும், தேவைப்படும் இடங்களில் குறைந்தபட்சக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தொலைநிலைக் கல்விக்கு மாற்றுப் பெயர் ‘ வாழ்நாள் முழுவதும் கற்றல் ‘. எனவே, சேர்க்கைக்கு உச்சபட்ச வயது வரம்பு, வரையறை ஏதும் இல்லை. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேரும் கற்போர்கள் வாழையடி வாழையாகப் பல தலைமுறையாப் பயின்று வருவது கண்கூடு..

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் நான் எப்படிச் சேர்வது ?

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கற்போர் சேர்க்கை இரண்டு கல்விச் சுழற்சிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

i) நாட்காட்டி ஆண்டு சேர்க்கை – ஜனவரி முதல் டிசம்பர் வரை
ii) கல்வி ஆண்டு சேர்க்கை – ஜூலை முதல் ஜூன் வரை.

இணையவழி சேர்க்கைக்கான நுழைவு வாயில் (Portal) www.tnou.ac.in. என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளது. மாணவர்கள் கட்டணத்தை இணைய வழியாகவோ (credit card/debit card)) மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT/RTGS) மூலமாகவோ செலுத்தலாம்

TNOU வில் நான் எவ்வாறு பதிவு செய்வது?

எங்கள் இணையதளத்தில் உள்ள இணையவழிப் பக்கத்தில் நீங்கள் பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள கற்றல் உதவி மையங்கள் / தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்

இணையவழிச் சேர்க்கைக்கான நடைமுறைகள் என்ன?

உரிய தகுதிகளுடன், விரும்பிய பாடப்பிரிவுச் சேர்க்கைக்குத் தேவையான ஆவணங்களை இணைய வழியில் (online) சமர்ப்பித்த பின்னர், இணையவழியில் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மண்டல மையங்கள் மற்றும் கற்றல் உதவி மைய அலுவலர்களின் சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் மண்டல மையங்கள் மற்றும் கற்றல் உதவி மையங்களும் உங்களுக்கு உதவும். எங்கள் வலைத்தளத்தையும் பார்வையிடுக: http://www.tnouadmission.in/

ஆலோசனை வகுப்பு என்றால் என்ன?

பாடத்திட்டங்களுக்கான பாட நூல்களில் எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழகம் வழங்கும் நேரடி வகுப்பு முறையே ஆலோசனை வகுப்பு என்பதாகும்

நான் எங்கே ஆலோசனை பெறவேண்டும் ?

பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கற்றல் உதவி மையங்கள் உள்ளன. (LSC கள்). உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள கற்றல் உதவி மையம் ஒன்றில் நீங்கள் இணையலாம்

ஏதேனும் விளக்கம் பெறுவதற்கான தொடர்பு அலுவலர் யார்?

உடனடித் தொடர்புக்கு கற்றல் உதவி மையங்கள் துணைபுரியும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்களின் உதவியையும் நீங்கள் நாடலாம். போதுமான விளக்கம் கிடைக்கப்பெறாத நிலையில், www.tnou.ac.in. என்ற இணையதள முகவரிக்கு உங்கள் கேள்விகளை எழுதலாம். மின்னஞ்சல்/தொலைபேசி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். சிக்கல்களின் தன்மைக்கேற்ப பல்கலையின், பல்வேறு பிரிவினரும் விளக்கம் தருவார்கள்.

ஒவ்வொரு வாரமும் எனது பாடத்திட்டத்திற்கு (படிப்பிற்கு) எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்?

நீங்கள் பாட நூலைப் படிக்கவும், ஒப்படைப்புகளை (Assignments ) தயார் செய்யவும் ஒரு பாடத்திற்கு வாரத்தில் 30 மணிநேரம் செலவழிக்க வேண்டும் என்பது பொதுவான விதி, கற்றல் முறைகள் வேறுபட்டாலும், தொடர்ந்து படிக்கும் வழக்கத்தில் கவனம் செலுத்திவந்தால் வெற்றிகரமாக நிறைவு செய்ய இயலும்

ஆலோசனை வகுப்பிற்கு வருகைப் பதிவு கட்டாயமா?

செயல்முறை சார்ந்த வகுப்புகளைத் தவிர, இதர கருத்தியல் பாட வகுப்புகளில் 50 விழுக்காடு வருகை புரிவதும் உங்களுக்குக் கூடுதல் மதிப்பெண்களை வழங்கும். ஆனாலும் நீங்கள் ஆலோசனை வகுப்புகளில் முழுமையாகக் கலந்து கொள்வது நல்லது; தவறாமல் கலந்து கொள்வதன் மூலம் கற்றல் பயன்பாடு மதிப்பிடப்படும். ஆனால், செயல்முறை வகுப்புகள், பயிற்சி, பட்டறைகள், கருத்தரங்குகள், திட்ட அறிக்கை அமர்வுகள், களப்பயணங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வது கட்டாயம் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்

கற்றல் உதவி மையத்தை மாற்றிக்கொள்ள ஏதேனும் வழிமுறை உள்ளதா?

நீங்கள் சேர்ந்த பாடத்திட்டம், நீங்கள் மாற்றிக் கொள்ள விரும்பும் புதிய மையத்தில் வழங்கப்படும் பட்சத்தில் மாற்றிக்கொள்ளலாம். கற்றல் உதவி மையத்தை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கையை tnousssd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாற்றம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் மாற்றம் இடம்பெறுவதைக் காணலாம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகளில் நான் சேர முடியுமா?

இயலாது. பல்கலைக்கழக நிதிநல்கலைக் குழு (UGC) வழிகாட்டுதலின்படி இது அனுமதிக்கப்படவில்லை

அனைத்துக் கல்வி நிகழ்வுகளையும் நான் எப்படி அறிந்து கொள்வது?

இது குறித்து அறிய, www.tnou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தினை நாள்தோறும் பார்வையிடுக.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் எத்தனை மண்டல மையங்கள் நிறுவப்பட்டுள்ளன?

தமிழ்நாடு அரசின் அறிவிக்கைகளின்படி, பல்கலைக்கழகம் இதுவரை சென்னை, தர்மபுரி, மதுரை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம், சேலம், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய பன்னிரண்டு (12) மண்டல மையங்களை நிறுவியுள்ளது. கற்றல் உதவி மையங்கள் மற்றும் மண்டல மையங்களின் தொடர்பு விவரங்களை www.tnou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் அறியலாம்.

கல்வி உதவித்தொகையை நான் பெற முடியுமம?

நீங்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தலைமையகம், மண்டல மையங்கள் மற்றும் கற்றல் உதவி மையங்களில் (LSC) கல்வி உதவித் தொகையைப் பெறுவது தொடர்பான வழிகாட்டலுக்கு அணுகலாம். இந்த மையங்களின் தொடர்பு விவரங்கள் www.tnou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளன.

கல்வி ஆலோசனை என்றால் என்ன?

தொலைநிலைக் கல்வியில், கல்வி ஆலோசனை என்பது அந்தந்த, கற்றல் உதவி மையத்தில் பல்கலைக்கழகத்தில் கற்போர்களுக்கு வழங்கப்படும் கற்றல் வழிகாட்டல் ஆகும் அங்குள்ள கல்வி ஆலோசகர்களிடமிருந்து பாடத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெறலாம்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் கல்வி ஆலோசனை வகுப்புகளை ஏற்பாடு செய்கிறதா?

ஆம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த கற்றல் உதவி மையங்களில் கல்வி ஆலோசனை வகுப்புகளை ஏற்பாடு செய்கிறது. சில சிறப்பு நேர்வுகளில் பல்கலைக்கழகத்தின் தலைமையகத்திலிருந்து நேரடியாகவே இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும். கல்வி ஆலோசனை வகுப்புகளுக்கான கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது; மின்னஞ்சல்/ குறுஞ்செய்தி (SMS) மூலமும் மாணவர்களுக்குத் தகவல் அனுப்பப்படும்.

கல்வி ஆலோசனை வகுப்பில் வருகைப் பதிவு கட்டாயமா?

ஆம், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தொடர் அக மதிப்பீட்டின் (Continuous Internal Assessment) மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் கல்வி ஆலோசனை வகுப்பிற்கு வருகைப் பதிவு கட்டாயமாகும்

பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பீட்டு முறை என்பது என்ன?

பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்ட பின்வரும் மதிப்பீட்டு முறை 2020 – நாட்காட்டியாண்டிலிருந்து அமலுக்கு வருகிறது:

தொடர் அக மதிப்பீடு : 30 மதிப்பெண்கள்
இறுதித் தேர்வு : 70 மதிப்பெண்கள்

முந்தைய ஆண்டிற்கான நாட்காட்டியாண்டு – (2020 க்கு முன்), மதிப்பீட்டு முறை கீழே காட்டப்பட்டுள்ளது:

தொடர் அக மதிப்பீடு : 25 மதிப்பெண்கள்
இறுதித் தேர்வு : 75 மதிப்பெண்கள்

ஒவ்வொரு மதிப்பீட்டு முறையிலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைப் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா?

ஆம், தொடர் அக மதிப்பீடு மற்றும் இறுதித் தேர்வு மதிப்பெண்கள் ஆகிய இரண்டிலும் ஒரு கற்போர் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தேர்வுக் கையேடு/ தகவல் குறிப்பேடு / பாடத்திட்ட அறிக்கையைப் பார்க்கவும்.

தொடர் அக மதிப்பீட்டில் என்ன என்ன கூறுகள் உள்ளன?

தொடர் அக மதிப்பீட்டில் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று கல்வி ஆலோசனை வகுப்பில் வருகைப் பதிவு; மற்றொன்று வீட்டுப் பயிற்சிப் பாட ஒப்படைப்பு சமர்ப்பித்தல்.

தொடர் அக மதிப்பீட்டில் மதிப்பீட்டு முறை பின்வருமாறு:

ஒப்படைப்புகளைச் சமர்ப்பித்தல் : 15 மதிப்பெண்கள்

கல்வி ஆலோசனை வகுப்பில்
கலந்து கொள்வது : 15 மதிப்பெண்கள்

ஒப்படைப்பு வினாத்தாள்களை எங்கே பெற முடியும்?

ஒப்படைப்பு வினாத்தாள்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஒப்படைப்புகள் எழுதும் பணிகள் முடிந்தபிறகு இணையவழியாகவே பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு பாடத்திற்கு எத்தனை ஒப்படைப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

ஒரு பாடத்திற்கு, ஒவ்வொரு 2 கற்றல் அளவெண்ணிற்கும் (Credit) ஒரு ஒப்படைப்பு என்ற விகிதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு யாரைத் தொடர்பு கொள்ளலாம்?

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகப் படிப்புகள், பாடத்திட்டங்கள் தொடர்பான விவரங்களுக்கு இந்த ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

What is Open Learning?

Open learning refers to ‘openness’ in education. You can take the education that you want, at your pace and wherever it is needed. You are not bound to attend regular classes. There is no upper age limit for a student. There is flexibility in course combinations.

Does Distance Education have the same status as conventional education?

Yes. Distance Education is the accepted mode adopted by a number of Universities the world over. Almost all these universities use the conventional mode too.

Is the TNOU a recognised university?

Yes. The Tamil Nadu Open University (TNOU) was established by an Act (Act No.27) of the Legislative Assembly of the Government of Tamil Nadu in 2002.The University Grants Commission (UGC) has given recognition to the TNOU under Sec.12-B of the UGC Act, 1956.

Is the TNOU student(Formal Stream) eligible for UPSC examinations?

Yes, because TNOU is a recognized university established by the Govt. of Tamilnadu.

Are the TNOU degrees, diplomas and certificates recognised for Government Jobs?

Yes (if it is 10+2 for Degree for state Government jobs and promotions. For Central Government jobs and promotions, the 10 + 2 pattern for a degree is not mandatory)

Where is the TNOU located?

The University Headquarters is at 577,Anna Salai, Saidapet, Chennai – 600 015

Is it necessary for me to visits the Headquarter at Saidapet, Chennai for studying?

Not necessary. You could study sitting at home or wherever you find it convenient to study. However, there are certain programmes, for which practical sessions or similar activities are compulsory, for which you will have to attend the Learner Support Centres established at across the state. You can select one which is near you.

Where are the Regional Centres of the University located?

The Regional Centres are located in the following districts in Tamil Nadu: i.Chennai, ii.Dharmapuri, iii.Madurai, iv.Tirchy, v.Coimbatore, vi.Villupuram, vii. Niligris and viii.Tirunelveli

Does the University provide study material?

Yes, TNOU provides study material in Self Learning format to the students for all its Programmes. The cost of this is included in the Programme Fees.

From where can I receive the study material?

Generally, from the Learner Support Centre you have selected. The Study Centre distributes the study material after confirmation of the student’s admission.

What are the academic programmes and courses offered by the TNOU?

There are a number of programmes on offer right from the Certificate level up to the Doctoral level. These programmes are run by the different Schools of the University. You may check the list of programmes offering by TNOU from the website.

Is there any age restriction in joining courses offered by Open University?

No. There is no age restriction for admission provided the minimum qualification required for admission is fulfilled. The other name of distance education is life-long learning. So, there is no age bar or age restriction for admission. There are instances where learners across generations join Open University. But minimum age limit shall be 21 years completed for non-formal stream admission.

I have not passed my SSLC or HSC. What Courses can I take at TNOU?

TNOU is the only university that has been permitted by the Govt of Tamil Nadu to offer TNOU programmes under non-formal stream. Those candidates who have not successfully completed the HSC or equivalent examination but have completed 18 years of age may be admitted to UG programme and Diploma Programmes as offered by concerned programmes listed by TNOU for which you have to attend and complete TNOU bridge courses (BPP).

How can I take admission in courses offered by the University?

Admission process will be round the year. The admission activities of the University are carried out in two academic cycles viz

i) Calendar Year – from January to December and
ii) Academic Year – from July to June.

Online admission portal is available on the University website: www.tnou.ac.in . Students are required to pay Programme fee through the online payment gateway (credit card/debit card) and through NEFT/RTGS.

How do I register myself with the TNOU?

You can register yourself in the online portal of our Website or contact the nearby Learning Support Centre Coordinator/Regional Centres of TNOU for assistance.

What is the online admission procedure?

With producing necessary documents and verified by the concerned staff of Regional Centres and Learner Support Centre, if your are eligible to admit the desired programme, you have to pay the programme fees in online mode and register you admission on the same for which Regional Centres and Learner Support Centre will facilitate you for admission. Visit our website: http://www.tnouadmission.in/

What is counselling?

Counselling is the academic support given by the University through various modes.

Where will I get counselling?

Generally, at the Learner Support Centres

Who is the right authority to contact in case of queries?

The first time of contact is the Learner Support Centre. You can also seek the help of the coordinating respective Regional Centres of TNOU. Still, if you are not satisfied you could write/email/phone, etc., at the address given in the Website. Depending on the nature of help, different sections will attend to your query.

How much time will I need to devote to my course each week?

A general rule of thumb is that you should expect to spend 6 to 12 hours a week, per Course, in order to study the material and prepare for assignments etc,. Though learning styles differ, you must concentrate on study routine and schedule early so as to successfully complete your Programme.

Is attendance mandatory for counselling session?

Except practical oriented sessions, the attendance is not mandatory. You are advised to attend counselling sessions. The learning outcome will be assessed through your regular attendance in counselling. Theory counselling is not compulsory though strongly recommended. Please note that practical sessions, hands-on training, workshops, seminars, project report writing and field visits, wherever prescribed, are compulsory

Is there any provision for change of study centre?

Change of Study Centre is allowed provided the programme in which you have taken admission is activated in the new centre. You are required to submit your request for change of Study Centre through e-mail to tnousssd @gmail.com. You will be communicated through mail after change is made effective. This will also be reflected on the TNOU website.

Can I enrol for two degree programmes simultaneously in the TNOU University?

No. This is not permitted, as per the UGC guidelines.

How can I know the all academic events?

You are advised to visit www.tnou.ac.in.

How many Regional Centers are established by the University?

In accordance with the notifications of the Government of Tamilnadu, the University has so far established Twelve (12) Regional Centres at Chennai, Dharmapuri, Madurai, The Nilgiris, Tiruchirappalli, Tirunelveli, Villupuram, Salem, Maiyladuthurai, Sivagangai and Thiruvannamalai for the benefit of the learners as well as the stakeholders. The contact details of these Regional Centres are available at www.tnou.ac.in

Where can I get the academic supports?

You can get the academic supports from the Headquarters, Regional Centres and Learner Support Centres (LSCs). The contact details of these Centres are available at www.tnou.ac.in

What is called as Academic Counselling?

In Distance Education, academic counselling is a kind of learning support provided to the learners of the University at the respective Learner Support Centre, where they can get counselling from the Academic Counsellors with respect to their Subject / Syllabus.

Does the University organise the Academic Counselling Classes?

Yes, as per the UGC norms, the University organises the Academic Counselling Classes at the respective Study Centres mostly on Saturdays and Sundays. The time table will be hosted on the University website and also be sent to the learners by email/SMS.

Is the attendance in the Academic Counselling Class mandatory?

Yes, the attendance in the Academic Counselling Class is mandatory that will be taken into account of CIA Marks.

What is University’s evaluation pattern?

The following evaluation pattern is adopted by the University from the Calendar Year 2020 onwards:
Continuous Internal Assessment (CIA) : 30 Marks
Term End Examination (TTE) : 70 Marks
For previous batches (before Calendar Year 2020), the evaluation pattern was as shown below:
Continuous Internal Assessment (CIA) : 25 Marks
Term End Examination (TTE) : 75 Marks

Are there any prescribed norms for acquiring minimum pass marks in each evaluation pattern?

Yes, a learner should acquire minimum pass mark in both the CIA and TEE. For further details, please refer the Examination Manual/ Prospectus/ Programme Project Report.

What are the components in the Continuous Internal Assessment (CIA)?

There are two components in the CIA. One is attendance in the Academic Counselling Class and another one is submission of Home Assignment.
The following is the evaluation pattern in CIA:
Submission of Home Assignments : 15 Marks
Attending Academic Counselling Class : 15 Marks

Where can I get the question papers of Home Assignments?

You can download the question papers of Home Assignments from the University website. The written assignments shall be submitted through online.

How many Home Assignments are to be submitted for a Course?

One Home Assignment should be submitted for each 2 Credit of a Course.

Who can be contacted for the details relating to Programmes and curriculum in the University?

A Programme Coordinator is nominated for each Programme. He/she can be contacted for the details relating to Programmes and curriculum in the University.

It is, therefore, requested, that the above FAQs may be forwarded to the Centre for University Informatics in order to place it on the website.

Quick Enquiry